The Psychology Of Money பணம் பண்ணும் மனம்
Psychology of Money: Timeless lessons on wealth, greed and happiness -
by Morgan Housel (PDF version is attached).
‘பணம் பற்றிய உளவியல்’ என்று சொல்லாமல் ‘பணம் பண்ணும் மனம்’ என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது?
பணம் நம் மனத்தைப் (மனப்போக்கைப்) பண்ணுகிறது (செய்கிறது / வடிவமைக்கிறது) என்பது ஒரு பொருள். 'பணம் வந்தவுடன் ஆள் மாறிவிட்டான்' என்றும் 'எல்லாம் பணம் பண்ற வேலை' என்றும் 'பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்றும் 'பணம் பாதாளம் வரை பாயும்' என்றும் 'காசில்லை என்றால் கணவனே ஆனாலும் கதவைச் சாத்தாடி பெண்ணே' என்றும் உள்ள சொற்றொடர் வழக்குகள் இதைத் தான் குறிக்கின்றன.
பணம் பண்ணுவதற்கு (சாம்பதிப்பதற்கு / சேர்ப்பதற்கு / காப்பாற்றுவதற்கு) எத்தகைய மனம் வேண்டும் என்பதைக் குறிப்பது மற்றொரு பொருள். அதாவது இந்நூலில் சான்றுகளுடன் விவரித்துள்ள உள்ள மனப்போக்கு பணத்தைப் பெருக்கப் பயன்படும்.
சரி, தமிழ்த் தலைப்பைப் பற்றிய தம்பட்டம் போதும். நூலைப் பற்றிய நம் கருத்துகளை நூற்போம்!
253 பக்கங்களில் மூன்று இடங்களில் தான் தத்துவம் (philosophy) என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் புத்தகத்தின் தலைப்பில் உளவியல் என்று குறிப்பிட்டு இருந்தாலும் புத்தகத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய சாரம் தத்துவ முத்துகளே.
Philosophy (From Greek - philosophia meaning phil - love, sophia - knowledge / wisdom) means love of wisdom. Philosophy permeates / helps in all facets of living including making wealth.
தத்துவம் என்று சொன்னால் வறட்டுத் தனமாக ஒலிக்கலாம். அதற்குப் பதிலாக உளவியல் உத்திகள் (psychological tips) என்று சொல்லலாம்; கருத்துக் கண்ணாடிகள் (conceptual lens) என்றும் சொல்லலாம்.
நூலில் சொல்லப்பட்டுள்ள உத்திகள் எவையும் புதியவை அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக பல வடிவங்களில் (மத போதனைகள், நீதி நூல்கள், இதிகாசங்கள், பழமொழிகள், இலக்கியங்கள்...) சொல்லப்பட்டவையே.
என்றாலும் அவற்றை இத்தலைமுறையினருக்குச் சுவைக்கும் படியாக, பில் கேட்ஸ், வாரன் பஃப்பே, ராக்பெல்லர் போன்ற பலரின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகளோடு நூலாசிரியர் சொல்லியுள்ளார்.
சிக்கனமாக இரு.
சேமித்து வை.
அடுத்தவர்கள் மதிப்புக்காகப் பகட்டில் பாழாகாதே.
வருமானத்திற்குள் வாழ்.
ஆசைகளைக் கட்டுப்படுத்து.
உலகம் பெரிது. நீயோ ஒரு தூசு. உன் வாழ்க்கையோ ஒரு நீர்குமிழி. எனவே உன் புரிதல் கடுகளவு.
இன்பம் துன்பம் / ஏற்றம் இறக்கம் எதுவும் நிலைக்காது.
பணத்தை விட உறவு, நட்பு அவர்களிடம் உள்ள ஒத்திசைவு முக்கியம். அதுவே நீடித்த மகிழ்ச்சிக்கு அடிப்படை.
வாழ்க்கையில் / எதிர்காலத்தில் எதுவும் (ஆக்கம் / அழிவு) நடக்கலாம். எனவே அதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொள்.
உன்னுடைய முயற்சிக்கு ஒரு பங்கு உள்ளது. அதைத் தவிர பிற எதுவும் உன் கட்டுப்பாட்டில் இல்லை.
வெற்றி / நல்லது / இன்பம் நேரும் போது எல்லாம் உன்னால் என்று மயங்காதே. அதே போல் தோல்வி / தீயது / துன்பம் நேரும் போது எல்லாம் உன் தவறு என்று துவளாதே.
இவை ஒவ்வொன்றிற்கும் திருக்குறள் போன்ற நூல்களிலிருந்து பொருத்தமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
எதிலிருந்து (நூல் / மொழி / மரபு / பண்பாடு / மதம் / கலை / இலக்கியம் / அறிவியல் / விளையாட்டு / உழவு / தொழில் / வணிகம்...) தெரிந்து கொள்கிறோம் என்பதை விட என்ன (lessons / பாடங்கள்) தெரிந்து கொள்கிறோம் என்பதே முக்கியமில்லையா?
அமெரிக்காவை அடிப்படையாக வைத்து இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும் மனிதர்களின் இயல்புகள் உலகெங்கும் ஏறத்தாழ (சில மரபு, பண்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பால்) ஒரே மாதிரியாகத்தானே உள்ளன. மேலும் பொருளாதார உலகமாயமாக்கல் என்பது அது பரவிய எல்லா நாடுகளிலும் மனிதர்களின் ஆங்காங்கு நிலவி வந்த மரபு வாழ்க்கை முறைகளை மாற்றி ஒரே நீரோட்டத்தில் இழுத்து வருகின்றதே.
இந்நூலில் பல பகுதிகள் எனக்குப் பிடித்தும் பொருள் பொதிந்தும் இருந்தாலும் முக்கியமாக இந்நூலின் கடைசியில் ஆசிரியர் தன் வாழ்வில் இவற்றை எப்படிக் கடைபிடிக்கிறார் என்பதைச் சொல்லியிருப்பதுதான். சொல்லும் செயலும் பொருந்தாவிடில் என்ன பயன்?
மற்றொரு சிறப்பான பண்பு இவ்வாசிரியர் தான் கண்டதே எல்லோருக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் பொருந்தி வரும் என்று போதனை செய்யாமல் அவரவர்கள் தங்களுக்கு எவை முக்கியம் என்று முடிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவற்றைப் பொறுத்து உத்திகள் வேறுபடும் என்பதையும் பல இடங்களில் தெளிவாக்கி உள்ளதாகும்.
சரி இந்த அளப்பை இத்துடன் முடித்துக் கொண்டு நூலிருந்து சில வரிகளைப் (not all are exact words from the book) பார்ப்போம். Hope this introduction inspires you to read the book in full.
“Less ego, more wealth”
“It is never as good or as bad as it looks”
“Respect the power of luck and risk”
“Time is the most powerful force in investing” (i.e. money compounds over longer time)
“Control over your time / life to do what you want, with who you want for as long as you want to, is the highest dividend of wealth” (So, always be mindful whether you are achieving that independence when trying to make wealth).
“No one is impressed with your possessions as much as you are” (you may think others admire you when they are actually admiring your possession imaging to possess them)
“You are more likely to gain respect and admiration by kindness and humility than horsepower (flashy car) and big house etc.
“Save for saving sake”
“Define the game you are playing. Don’t become a victim in others’ games”.
“I did not intend to get rich. I just wanted to get independent.”
The Psychology of Money: Timeless lessons on wealth,
greed and happiness - by Morgan Housel
Doing well with money isn’t necessarily about what you know. It’s about how you behave. And behavior is hard to teach, even to really smart people.
Money—investing, personal finance, and business decisions—is typically taught as a math-based field, where data and formulas tell us exactly what to do. But in the real world people don’t make financial decisions on a spreadsheet. They make them at the dinner table, or in a meeting room, where personal history, your own unique view of the world, ego, pride, marketing, and odd incentives are scrambled together.
In The Psychology of Money, award-winning author Morgan Housel shares 19 short stories exploring the strange ways people think about money and teaches you how to make better sense of one of life’s most important topics.
0 Comments